4 ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழா ; பஹ்ரைனுக்கு புறப்பட்டது இலங்கை குழாம்

Published By: Digital Desk 3

27 Nov, 2021 | 12:31 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பஹ்ரைனின் மனமா நகரில் அடுத்த மாதம் 2 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள 4 ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக இலங்கை குழாம் இன்றைய தினம்  இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 7 பேர் போட்டியிடவுள்ளனர்.

20 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டி உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இப்போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை குழாமுக்கான பூரண அனுசரணையை முதல் தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சு வழங்குகிறது.

நடைபெற்று முடிந்த டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கை உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை  ஈட்டிக்கொடுத்தமை,  இம்முறை  ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை இளையோர் பரா குழாத்துக்கும் சிறந்த அனுசரணை கிடைப்பதற்கும் உதவிக்கரமாக அமைந்ததாக தேசிய பராலிம்பிக் குழுவின் உப தலைவர் பிரியன்த்த பீரிஸ் தெரிவித்தார்.

ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் இலங்கை இதுவரை  3 தங்கப் பதக்கங்களும், 3 வெள்ளிப் பதக்கங்களும் வென்றுள்ளன.

இதில்  2009 இல் ஜப்பானின் டோக்கியோவில் நடத்தப்பட்ட முதலாவது அத்தியாயத்தில் ஒரேயொரு வெள்ளிப் பதக்கத்தை மாத்திரம் வென்றிருந்தது.

2013 இல் மலேஷியாவின்  கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கை 3 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியிருந்து.

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் கடைசியாக நடைபெற்ற 3 ஆவது அத்தியாயத்தில் இலங்கை  எந்தவொரு பதக்கத்தையும்  கைப்பற்ற  முடியாமல் போனது.

இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள ஜேசன் ஜயவர்தன மீது பலரும் தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். அதற்கு காரணம் அவரின் குறைவான உயரமாகும்.

18 வயதான ஜேசன், 130 சென்ரி மீற்றருக்கும் குறைவான உயரம் உடையவர்களுக்கான பிரிவில் இவர் பங்கேற்கவுள்ளார். இவர் ஆண்களுக்கான டி 41 100 மீற்றர் மற்றும் எப் 41 ஆண்களுக்கான குண்டெறிதல், தட்டெறிதல் ஆகிய மூன்று வகையான போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். 

2017 இல் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பரா நீச்சல் வீரரான நவீட் ரஹீம், இலங்கை குழாமின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப வைபவத்தின்போது இலங்கை தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 ஆவது ஆசிய இளையோர் பரா விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை குழாம் விபரம்

1. நவீட் ரஹீம் ( எஸ்10  ஆண்களுக்கான 50 மீற்றர் நீச்சல்போட்டி, 100 மீற்றர் நீச்சல் போட்டி )

2. ஜனனி தனஞ்சனா (டி 46 பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி, 200 மீற்றர் ஒட்டப்போட்டி, நீளம் பாய்தல்)

3. சப்ரான் முஹம்மது (டி 46 ஆண்களுக்கான  நீளம் பாய்தல்)

4. இசுரு அசங்க (டி47 ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி, 200 மீற்றர் ஓட்டப் போட்டி, நீளம் பாய்தல்)

5.ஜேசன் ஜயவர்தன ( டி41 ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி, எப் 41 ஆண்களுக்கான குண்‍டெறிதல், தட்டெறிதல்)

6.ரவிந்து சிரஞ்சய ( பார்வை குறைபாடுடைவர்கள் பங்கேற்கும் டி11 ஆண்களுக்கான100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர்)

7. செலீனா பஸ்நாயக்க  (எஸ்10  பெண்களுக்கான 50 மீற்றர் நீச்சல்போட்டி, 100 மீற்றர் நீச்சல் போட்டி, 400 மீற்றர் நீச்சல் போட்டி )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41