குறிப்பிட்ட சில ஆபிரிக்க நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இன்று (27) நள்ளிரவு முதல் இலங்கைக்கு வருகை தர பயணத்தடை விதிக்கப்படுவதாக  சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ  மற்றும் எஸ்வதினி ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில் பயணித்தவர்களுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்படுகிறது.

அவ்வாறு அவசர தேவைகளுக்காக வருகை தர வேண்டியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.