கொவிட் தொற்றுக்கு பின் குருதி உறைதல் ஏற்பட்டால் பாரிய ஆபத்து : விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க

27 Nov, 2021 | 05:53 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளாகி 28 நாட்களின் பின்னர் 'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படுவதால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடும். 

இவற்றில் குருதி உறைதல் நிலைமை ஏற்பட்டால் மாரடைப்பை போன்ற நோய் நிலைமை ஏற்படக் கூடும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் தொற்றுக்குள்ளாகி 28 நாட்களின் பின்னர்  'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படுதல் அதிகரித்துள்ளது. 

இதனால் பாதிக்கப்படும் பலர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளுக்கு வந்து மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.  

'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' எனும் போது தொற்றின் போது காணப்பட்ட அறிகுறிகள், வேறு நோய் அறிகுறிகள் மற்றும் புதிய நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இவை தவிர சிகிச்சையின் போது எடுத்துக் கொண்ட மருந்துகளாலும் பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்.

 'கொவிட் தொற்றுக்கு பிந்தைய நிலைமை' ஏற்படும் போது அதிக உடற்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் வலி என்பன ஏற்படும். இதே வேளை சுவாசிப்பதில் சிரமமும் ஏற்படும். 

இவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் ஊடாக தீர்க்கக் கூடியவையாகும். எவ்வாறிருப்பினும்இ குருதி உறைதல் ஏற்பட்டால் அது ஆபத்தானதாகும்.

குருதி உறைதல் ஏற்பட்டால் இதயத்தின் இரத்தக்குழாய்களில் கட்டிகளைப் போன்ற நிலைமை தோற்றம் பெற்று மாரடைப்பை போன்ற நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இது ஆபத்தான நிலைமையாகும். எனவே கொவிட் தொற்றுக்கு பின்னரான இவ்வாறான நிலைமைகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதே சிறந்ததாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22