அரச வைத்தியசாலைகளின் இருதய கண்காணிப்பு சேவையாளர்கள் இன்று முதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.

இதன்காரணமாக அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற இருதய அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த சேவைப் புறக்கணிப்பு இடம்பெறுகிறது.