(செய்திப்பிரிவு)

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 (வியாழன்), 24 (வெள்ளி) மற்றும் 25,26 ஆம் திகதிகளில் நத்தார்  விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் காரணமாக சுமார் 06 மாத காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள்  கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி முதல் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இம்மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலை  கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும், 2021ஆம் ஆண்டுக்கான தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக சுமார் 2வருட காலமாக பாடசாலைக் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக தவணை விடுமுறைகளை இயலுமான அளவு மட்டுப்படுத்த கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.