துக்கத்திலும் சந்தோசத்திலும் எம்முடன் கைகோர்த்த நண்பனும் சகோதரனுமான சீனா அதிருப்தியில் அந்நியப்பட்டுள்ளது - சஷீந்திர ராஜபக்ஷ 

Published By: Digital Desk 4

26 Nov, 2021 | 08:42 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

சீன உர இறக்குமதியில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களை குழப்பிய காரணத்தினால்  துக்கத்திலும், சந்தோசத்திலும் எம்முடன் கைகோர்த்த நண்பனும் சகோதரனுமான சீனா இராச்சியம் அதிருப்தியில் அந்நியப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு விவசாயிகள் சேதன பச‍ளை விவசாயத்துக்கு அஞ்சமாட்டார்கள் - சஷீந்திர  ராஜபக்ஷ | Virakesari.lk

சீன-இலங்கை நட்புறவு சகலதையும் விட உயர்வானது. உர விவகாரத்தில் என்ன தீர்மானம் எடுத்தாளும் அதனை தாண்டிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டு மக்களை நோயாளர்களாக மாற்றும், பூமியை நாசமாக்கும், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை அழிக்கும் வகையிலும், 100-150 பில்லியன் ரூபாய்களை ஒருசிலர் பங்குபோடும் விதமாக முன்னெடுக்கும் விவசாய முறைமையை முழுமையாக கைவிட்டு, மக்களை ஆரோக்கியமாக வாழ விடும் வேலைத்திட்டதையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

எனினும் இந்த ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் அழிக்கும்  கூட்டமொன்று மக்களை குழப்பியடித்துக்கொண்டுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள், இடதுசாரி கட்சிகள் அவர்களுக்கு துணைபோகும் ஊடகங்கள் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு எந்த சவால்கள் வந்தாலும் அவற்றை தாண்டி எமது கொள்கையை முன்னெடுப்போம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்த காரணத்தினால் இன்று விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை.

திட்டமிட்ட முறையில் கொண்டுவரப்பட்ட உரக் கப்பல் 70 நாட்களுக்கு மேலாக இன்றும் ஆழ்கடலில் நிற்கின்றது. துக்கத்திலும், சந்தோசத்திலும் எம்முடன் நின்ற எமது நண்பனும் சகோதரனுமான சீனா இராச்சியம் அதிருப்தியில் அந்நியப்பட்டுள்ளது. இதற்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கையின் இரண்டு பரிசோதனை கூடங்களில் ஒரே உரம் குறித்த இரண்டு மாறுபட்ட பெறுபேறுகள் வெளிப்படுத்தப்படுகின்ற நிலையில் சீனாவுக்கு எமீதான வேதனையான நிலையில் குரல் எழுப்பி கேட்கின்றனர். சீன-இலங்கை நட்புறவு சகலதையும் விட உயர்வானது.

உர விவகாரத்தில் என்ன தீர்மானம் எடுத்தாளும் அதனை தாண்டிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது மிக அவசியமானது.

மறுபுறம் இந்தியாவிடம் இருந்து நனோ நைற்றிஜன் உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனையும் ஊழல் என கூறி அதனையும் குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலேயே பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய உர உற்பத்தியாளர்களை கொண்டே இவை இப்போது கையாளப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் பெரும்போகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் விவசாயிகளுக்கும் நன்மை கிட்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34