இளைஞர்களுக்கு இறுதித் தீர்வினை வழங்கும் ZEE கணக்கை அறிமுகப்படுத்தும் NDB வங்கி

By Digital Desk 2

26 Nov, 2021 | 04:50 PM
image

தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு யுகத்தில், Gen Zers (1990 களின் இறுதிக்கும் 2010 களின் ஆரம்பத்திற்கும் இடையில் பிறந்தவர்கள்) புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுத்து, தங்களுக்கு எதிர்காலத்தை மறுவரையறை செய்கிறார்கள். 

அவர்கள், நெறிமுறைகளை சவால் செய்யும் தைரியம் கொண்டவர்களுக்கும், வெற்றிக்கான தங்கள் பாதையை அமைத்துக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் உலகை வரம்பற்ற வாய்ப்புக்கள் உள்ள இடமாகப் பார்க்கிறார்கள்.

அச்சமற்றவர்களாக இருப்பதுடன், Gen Zers தொழில்நுட்பத்தையும் அதன் அனைத்து சௌகரியங்களையும் ஏற்றுக்கொண்டுள்ள டிஜிட்டல் வாசிகளாவர். தொழில்நுட்பம் அவர்கள் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் ஒரே நேரத்தில் இணைந்திருக்கவும் ஒரு வழியாக மாறியுள்ளது. 

இந்த "எப்போதும் இயங்கும்" பிரிவில் தான் NDB வங்கி புத்தம் புதிய ZEE -டிஜிட்டல் இளைஞர் கணக்கு எனும் ஒரு பிரத்தியேக டிஜிட்டல் பயணத்தை, புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு வடிவில் அறிமுகப்படுத்துகிறது.

NDB Zee ஆனது இந்த நாட்டின் 18 முதல் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் உலகத்தைத் திறக்கிறது, இது டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட சலுகையுடன், இப்போதும் எதிர்காலத்திலும் உலகத்துடன் கைகோர்த்துச் செல்லும்.

இந்த குறிப்பிட்ட தலைமுறையினரின் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அறிவாற்றல் தன்மையைப் புரிந்துகொண்டு, NDB வங்கியானது, Gen Zers  எங்கிருந்தாலும், ஒரு கிளைக்குக் கூட விஜயம் செய்யாது, உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (VKYC) காணொளி மூலம் NDB Zee கணக்கை ஆரம்பிக்கக் கூடிய வசதியை வழங்கியுள்ளது.

 அதேவேளை, வங்கியின் தற்போதைய Gen Zers க்கு சேவை செய்யும் ஆர்வத்தில், ஏற்கனவே உள்ள ஷில்ப சிறுவர் கணக்கையும் NDB Zee கணக்காக மாற்றலாம். அனைத்து தேவைகளையும் வெற்றிகரமாக முடித்தவுடன், கணக்கு வைத்திருப்பவர் வெல்கம் பெக் (Welcome pack) மற்றும் மொபைல் டாப்-அப் உடன் கவர்ச்சிகரமான வரவு அட்டையைப் பெறுவார்.

வெற்றிக்கு அவசியமான கருவிகளை இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலமும், பேரார்வம் மற்றும் இலட்சியத்தால் உந்தப்பட்ட பயணத்தைத் தொடங்க அவர்களை ஊக்குவிப்பதன் மூலமும், Zee கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழி வகுப்பதையும் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மைல்கல்லையும் அடைய அவர்களுக்கு உதவுவதையும் NDB Zee நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், NDB Zee அதிக சாதனை படைத்தவர்களுக்கு வெகுமதி அளிக்கும். 

உதாரணமாக, கணக்கு வைத்திருப்பவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் நாடளாவிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றால், அவர்களுக்கு ரூ. 100,000 மற்றும் அவர்கள் மாவட்ட 1 ஆம் இடத்தைப் பெற்றால், அவர்களுக்கு ரூ.10,000 பரிசும் வழங்கப்படும். இதற்கிடையில், கணக்கு வைத்திருப்பவர், தேவைப்படும் போது உயர் கல்விக் கடன்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளைப் பெற முடியும்.

ஒரு கணக்கு வைத்திருப்பவர் தனது 21வது பிறந்தநாளை அடையும் போது, பணியமர்த்தப்பட்டவுடன் அவர்களுக்கு பாராட்டுக்குரிய பிறந்தநாள் பரிசு வெகுமதி வழங்கப்படும், மேலும் அவர்கள் தங்கள் சொந்த கடனட்டை மற்றும் சம்பள முன்பணத்திற்கும் விண்ணப்பிக்க முடியும். மேலும், அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் சிறப்பு அட்டைச் சலுகைகள், மொபைல் வழங்குநர்களிடமிருந்து கழிவுச் சலுகைகள், உடற் பயிற்சியக உறுப்பாண்மைகள், e-commerce சலுகைகள் மற்றும் அவர்களுக்குப் பொருத்தமான ஏற்ற பல வாய்ப்புகளுக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். NDB Zee கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உயர் கல்வி விருப்பங்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில் தொடங்குதல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஆலோசனை சேவைகளும் கிடைக்கும். 

அவர்கள் Zee கணக்குடன் முதன்மை டிஜிட்டல் வங்கி அனுபவமான NDB NEOSஐயும் அனுபவிக்க முடியும். அதனது வாடிக்கையாளர்கள்  இளமைப் பருவத்தில் நுழையுவதனால் அவர்கள் நிலையான அடித்தளத்துடன் நிறுவப்படும் வரை NDB Zee தனது வாடிக்கையாளரின் முக்கியமான வருடங்களில்  அவர்களுடன் இருக்கும்.

NDB ZEE ஆனது, வங்கியின் டிஜிட்டல் பயணத்தின் ஒரு மூலோபாய பகுதியாகும், மேலும், நாட்டின் இளைஞர்களின் வசதிக்காக, இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கி வழங்குனராக மாறுவதற்கான விரைவான பாதையில், டிஜிட்டல் வங்கித்துறையை ஆராய்வதிலும், முதலீடு செய்வதிலும் மற்றும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.    NDB ஆனது, போட்டிக்கு மத்தியிலும் டிஜிட்டல் வங்கியியலில் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளதுடன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் தொடர்ந்தும் புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் கௌரவமிக்க குளோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் (Global Finance Magazine) 2021 ஆம் ஆண்டிற்குரிய இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக மகுடஞ் சூட்டப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலாக, இலங்கைக்குரிய ஆசியாமணி மிகச் சிறந்த வங்கி விருதுகளில் “2021 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த டிஜிடெல் வங்கி” விருதினையும் பெற்றது.

 அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் த பேங்கர் சஞ்சிகையினால் “ஆண்டிற்குரிய மிகச் சிறந்த வங்கியாகவும்” அங்கீகரிக்கப்பட்டது. இது இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4 வது பெரிய வங்கியாகவும் NDB குழுமத்தின் தாய்க் கம்பனியாகவும் உள்ளது. இலங்கையில் உள்ள ஒரே நிதிச் சேவைக் கூட்டு நிறுவனமாகிய NDB குழுமமானது,  இலங்கை மூலதனச் சந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக, அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற அணுகலை வழங்குவதற்காகத் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53
news-image

பான் ஏசியா வங்கியுடனான பாங்கசூரன்ஸ் உறவை...

2022-12-20 14:47:23
news-image

தொடர்ச்சியாக கோடீஸ்வரர்களை உருவாக்கும் அபிவிருத்தி லொத்தர்...

2022-12-19 17:35:18
news-image

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை வாடிக்கையாளர்கள் அனுபவித்திட 'A...

2022-12-19 17:27:20
news-image

Excel World ஸ்னோ வேர்ல்ட்டை மீண்டும்...

2022-12-17 17:04:50