'ஃப்ளாஷ்பேக்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Gayathri

26 Nov, 2021 | 05:23 PM
image

'நடனப்புயல்' பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஃபிளாஷ்பேக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மகாபலிபுரம்', 'கொரில்லா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டான் சாண்டி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஃபிளாஷ்பேக்'.

இதில் நடனப்புயல் நடிகர் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான அனுசுயா பரத்வாஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகிறார்.

எஸ். யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

''காதலை மையப்படுத்தி படத்தின் திரைக்கதை உருவாகி இருந்தாலும், எழுத்தாளரான நாயகனுக்கும், ஆசிரியையான நாயகிக்கும் இடையே வளரிளம் பருவத்தில் ஏற்படும் காதலும் காமமும் கலந்த உணர்வை கண்ணியமான கனகாட்சிகளால் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.'' என்றார்.

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி. பிள்ளை தயாரித்திருக்கும் இந்தப் 'ஃபிளாஷ்பேக்' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபுதேவாவும், ரெஜினா கசாண்ட்ராவும் ஆட்டோகிராப் பட பாணியில் தோன்றுவதால் இரசிகர்களிடையே இதற்கு ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37