யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வீதியில் டயர் கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், மாவீரர் வாரம் என கண்காணிப்புகள் மற்றும் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை குருநகர் பகுதியில் வீதியில் டயர் கொளுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதாகிய மூவரும் கடும் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.