சைபீரிய நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழனன்று ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு தசாப்தத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்கப் பேரழிவு சம்பவம் இதுவாகும்.

மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 3,500 கிமீ (2,175 மைல்) தொலைவில் உள்ள கெமெரோவோ பகுதியில் அமைந்துள்ள Listvyazhnaya என்ற சுரங்கத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுரங்கத்தில் 285 பேர் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர், ஆனால் டஜன் கணக்கானவர்கள் சுரங்கத்தின் தொலைதூரப் பகுதியில் நிலத்தடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக Listvyazhnaya சுரங்க பணிப்பாளர் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.