(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஆளுங்கட்சி குப்பையை அவர்களே கிளரும் நிலையில் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

விவசாயத்துறை அமைச்சர் நேற்று சபையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்து சபையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவர் பாவித்த வாகனங்கள், அவரது வீட்டின் நீளமும் அகலமும் குறித்தெல்லாம் பேசினார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் ஆட்சிசெய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தவறான செயற்பாடுகள் குறித்து குற்றம் சுமத்தினார். அவர் விமானங்களை பாவித்த முறைமை, ஹெலிகொட்பர்களை பாவித்த விதம் குறித்தெல்லாம் பேசியுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தற்போதைய ஜனாதிபதி எவ்வாறு மக்கள் பணத்தை எவ்வாறு துஸ்பிரயோகம் செய்கின்றார் என்ற காரணிகளை கூறுகின்றார்.  

ஆகவே இந்த சபையில் இருந்து நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள் இந்த நாட்டிற்கு என்ன சாபக்கேடு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றார்.