(செய்திப்பிரிவு)

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாறுப்பட்டதன் காரணமாக கடந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது என்பதை அரச பகுப்பாளர் திணைக்களத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என நேற்றைய தினம் பிரதான பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துகிறேன் என அரச பகுப்பாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குதிரை பந்தய திடல் பார்வையாளர் கூடத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் அரச பகுப்பாளர் திணைக்களம் கடந்த 23ஆம் திகதி அறிக்கை வெளியிட்டது.

அவ்வறிக்கையில் 'பெற்றோலியம் வாயு குறித்த உணவகத்திற்குள்  கசிந்து அவ்வாயு மண்டலத்தில் வெடித்துள்ளதுடன்,அச்சந்தர்ப்பத்தில் உணவகத்தில் செயற்பாட்டில் இருந்த மின் உபகரணம் ஒன்றில் இருந்து  வெளிப்பட்ட மின்னனுக்கள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக ஏற்பட்டதாக' குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகவே நேற்றைய தினம் பிரதான பத்திரிகையில் வெளியான செய்தியை திருத்திக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.