ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸையும், உப தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தையும் வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.

கடந்த வாரம் அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தலைவர் பதவிலியிலிருந்து டிம் பெய்ன் இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வந்துள்ளது.

இதன் மூலம் 28 வயதான பேட் கம்மின்ஸ் அவுஸ்திரேலிய ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 47 ஆவது தலைவராகிறார்.

2017 ஆம் ஆண்டில் ஒரு பெண் சக ஊழியருடன் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகள் பகிர்வு தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக டாஸ்மேனிய விக்கெட் காப்பாளரும் டெஸ்ட் தலைவருமான டிம் பெய்ன் ஒரு வாரத்திற்கு முன்பு பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.