தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளி­னதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தியத் தமி­ழர்கள் என்றே பதி­யப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்­டியின் போது இந்­திய அணியின் வெற்­றியை பட்­டாசு கொளுத்தி, கைதட்டி குதூ­க­ளித்து அவர்கள் மகிழ்ந்தால் அதனை தவறு என்று கூறு­வ­து­ச­ரியா என்று ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

மலை­யக மக்­களின் வீட்­டுப்­பி­ரச்­சினை, வைத்­தி­ய­சாலை, அடிப்­படை சுகா­தாரப் பிரச்­சினை, அவர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு ஆகிய அனைத்­திலும் இன்று வரை அந்த மக்கள் ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று தெரி­வித்த விஜித ஹேரத் எம்.பி. எதிர்க்­கட்­சியில் இருந்த போது குரல் கொடுத்து இன்று பொறுப்­புள்ள அமைச்­சர்­க­ளாக இருப்போர் தமது பொறுப்­புக்­களை செயற்­ப­டுத்­துங்கள் என்றும் அமைச்­சர்­க­ளான மனோ­க­ணேசன் மற்றும் பழனி திகாம்­பரம் ஆகி­யோரைப் பார்த்துக் கூறினார்.

இதே­வேளை, தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் பாரிய நிதி மோசடி இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­வித்த அவர் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தை திகாம்­பரம் மன்­ற­மாக மாற்­றி­ய­மைக்­கப்­போ­கின்­றீர்­களா என்றும் அமைச்சர் திகாம்­ப­ரத்­திடம் கேள்வி கேள்­வி­யெ­ழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் பெருந்­தோட்டக் கைத்­தொழில், மலை­யக புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட எட்டு அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

விஜித்­த­ஹேரத் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் பாரிய நிதி மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

அப்­ப­டி­யானால் இந்த மோசடி தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன? இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வீர்­களா? அல்­லது தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தை திகாம்­பரம் ஞாப­கார்த்த மன்­ற­மாக மாற்­றி­ய­மைப்­ப­தற்குத் திட்டம் உள்­ளதா என்று கேட்­க­வி­ரும்­பு­கிறேன்.

இதே­வேளை தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நிலை­மை­களை எடுத்துக் கொண்டால் கூட்டு ஒப்­பந்தம் என்ற அடிப்­ப­டை­யி­லேயே அவர்­க­ளுக்­கான சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் மேற்­படி ஒப்­பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்­ளது. ஆனால் இன்று வரை அந்த ஒப்­பந்தம் புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அந்த மக்­க­ளுக்­கான சம்­ப­ளத்தில் 5 சத­மேனும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

எனினும் இலா­ப­மீட்டும் போது எதுவும் கூறப்­ப­டு­வ­தில்லை. தோட்­டங்கள் நட்­டத்­தில் இயங்கும் பட்­சத்தில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­பட வேண்டும். அதற்­கா­கவே அர­சாங்கம் உள்­ளது. பொறுப்­புள்ள அமைச்­சுக்­களும் இருக்­கின்­றன. எனினும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் விட­யத்தில் அமைச்­சு­களும், அர­சாங்­கமும் தவ­றி­யுள்­ள­தையே காண­மு­டி­கி­றது.

இன்று அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொண்­ட­வர்கள் அர­சாங்­கத்தைப் பாது­காக்கும் கருத்­துக்­களை தெரி­வித்து வந்­தாலும் தல­வாக்­க­லையில் அமைச்சர் திகாம்­ப­ரத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுத் தரு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தமை உண்­மை­யாகும்.

இன்று தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு வீடோ, காணியோ கிடை­யாது. ஆனால் அண்­மையில் சில­வீ­டு­களைக் கைய­ளித்து ஊடகக் கண்­காட்சி நடத்­தப்­பட்­டது. ஆனால் அவர்­க­ளது குறை­பா­டுகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அமரர் சந்­தி­ர­சே­கரன் காலத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தனி வீடு பெற்றுக் கொடுப்­ப­தா­கக்­கூறி செயற்­பட்ட போதும் அது பின்­னாளில் போலி­யா­ன­தாகி விட்­டது.

இது இவ்­வா­றி­ருக்க தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மி­ழர்கள் என்றே அவர்கள் பதி­யப்­ப­டு­கின்­றனர்.

இலங்கை – இந்­திய கிரிக்கெட் போட்­டி­யொன்று நடந்து அதில் இந்­திய அணி வெற்­றி­பெ­றும்­பட்­சத்தில் தமிழ் மக்கள் பட்­டாசு கொளுத்தி கைதட்டி குதூக­ளிக்­கின்­றனர். இதனைப் பார்க்­கின்ற சிங்­க­ள­வர்கள் குறைப்­பா­டாக கூறு­கின்­றனர். தமிழ் மக்­களின் பிறப்புச் சான்­றி­தழில் இந்­திய தமிழர் என்று பதி­யப்­படும் போது அவர்கள் இந்­திய அணியின் வெற்­றியில் குதூக­ளிப்­பதில் தவறு இருக்க முடி­யுமா-?

இங்கு தவ­றுகள் அவர்­க­ளி­டத்தில் இல்லை. நிர்­வாக ரீதி­யி­லேயே தவ­றுகள் இழைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லைமை மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும்.

எதிர்க்­கட்­சியில் இருக்கும் போது தோட் டத் தொழி­லா­ளர்­களின் குறைகள் குறித்து பெரி­தாக குரல் கொடுத்­த­வர்கள் இன்று அமைச்­சர்­க­ளா­னதும் அமை­தி­யா­கி­விட் டனர்.

எனவே பொறுப்­புள்ள அமைச்­சர்கள் இவ்வாறான விடயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

அனுராதபுரம், பொலன்னறுவையில் மாத்திரமே சிறு நீரகப்பிரச்சினை இருப் பதாக இங்கு யாரும் எண்ணிவிடக் கூடாது.

மலையகத்திலும் உள்ளது. அங்கு சுத்த மான குடிநீர் வசதி இன்மையாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பண்டாரவளை, பூனாகலை போன்ற பிரதேசங்களிலும் சிறுநீரக நோயினால் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு அமிர்தலிங்கம் என்ற 60 வயது நபர் சிறுநீரக நோயினால் இறந்துள்ளார். அதேபோன்று தியாகராஜா என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலை யில் கடந்த 6 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார் என்றார்.