பல குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ‘டிங்கர் லசந்த’ என்ற நபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான இவர் களுத்துறை, தியகம பகுதியில் வைத்தே பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.

சந்தேகநபர் வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்ய பொலிஸார் முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டெம்பர் 03 ஆம் திகதி மாத்தறையில் சுட்டுக் கொல்லப்பட்ட அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ‘சன்ஷைன் சுத்தா’ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்கே நபர் இவர் ஆவார்.