உரிய வகையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் நேற்யை தினம் 2,910 நபர்களுக்கு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டல்களை முறையாக அமுல்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேல் மகாணத்தில் விசேட சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கிணங்க நேற்றைய தினமும் மேல் மாகாணத்தில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த 845 போக்குவரத்து பொலிஸாரினால் 3,068 மோட்டார் சைக்கிள்கள், 3,207 முச்சக்கர வண்டிகளில் பயணித்த 9,764 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.