முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஹிஜ்சிராபுரம் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பாரிய நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில் உள்ளக வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு உடைமைகள் பல சேதமடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் மற்றும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி சரிந்து விழுந்த நிலையில் அருகில் இருந்த காணி உரிமையாளர்களின் வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு உள்ளக வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மின்னிணைப்புக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த இடத்துக்கு வருகைதந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குறித்த ஒப்பந்தத்தாரர்கள் ஊடாக பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த நிலைமைகளை பார்வையிட்டுள்ளதோடு மின்சார சபையினர் வருகை தந்து குறித்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்து பின்னர் பாகங்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM