(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் சுகாதார துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு , கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

சேவை தரத்தை உறுதிப்படுத்தப்படுத்தல், சம்பள முரண்பாடு, பதவி உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைககளை முன்வைத்து இவ்வாறு  பணி பகிஷ்கரிப்பும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

தாதியர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றன.

நாடுமுழுவதும்  சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியாசாலை மற்றும் கொவிட் தொடர்புடைய வைத்தியசாலைகள் தவிர்த்த ஏனைய வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலைகள் பலவற்றிலும் முன்னெடுக்கப்பட்ட இந்த பணிபகிஷ்கரிப்பின் காரணமாக நோயாளர்களும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.