(எம்.மனோசித்ரா)
கொத்மலை மற்றும் கம்பளை பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொத்மலை பொலிஸ் பிரிவில் வாலதென்ன நகரத்தில் அமைந்துள்ள 4 மாடி கட்டடமொன்றின் கீழ் மாடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் இறந்துள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய கொத்மலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிந்துள்ளவர் 57 வயதுடைய , கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.
இதே போன்று கம்பளை பொலிஸ் பிரிவில் ரன்தெட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் இறந்துள்ளதாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 34 வயதுடைய கல்வலவீதி, கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM