கொட்டாவையில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

Published By: Digital Desk 3

25 Nov, 2021 | 04:43 PM
image

(எம்.மனோசித்ரா)

பன்னிப்பிட்டிய - கொட்டாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதற்கான காரணம் சமையல் எரிவாயு கசிவாக காணப்படலாம் என்று கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

வெடிப்பு சம்பவத்தின் காரணமாக வீட்டின் சமையலறை முற்றாக சேதமைடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் குறித்த வீட்டிலிருந்த எவருக்கும் இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அதிகாலை 4 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக வெளியே செல்ல விரும்பாததால், சில நிமிடங்கள் கழித்து எங்கள் அறைக் கதவைத் திறந்தோம். அறையை திறந்து பார்த்த போது கூரையின் துண்டுகள் தரையில் சிதறிக் கிடந்தன. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையின் காரணமாகவே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கின்றோம். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாதிருந்தமை மகிழ்ச்சிக்குரியது.' என்று குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இம்மாதத்தில் மாத்திரம் இதனுடன் சேர்த்து 4  எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 4 ஆம் திகதி வெலிகம - கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர்.

இதேபோன்று கடந்த 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சமையல் எரிவாயு கசிவே இதற்கான காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் (20 ஆம் திகதி) கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு , இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் சமையல் எரிவாயு கசிவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

வீடுகளில் பாவிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரில் காணப்படும் அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவை வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் , அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் , எனினும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தாமையினால் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் இவ்வாறு வெளியிடப்படும் கருத்துக்களை லிட்ரோ நிறுவனம் மறுத்துள்ளது. இது பொதுமக்களை வீண் அச்சத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடு என்பதோடு , அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயலாகும் என்று லிட்ரோ நிறுவனத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரண தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பொது மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சமையல் எரிவாயுவை உபயோகிக்கும் போது வழமையாக பின்பற்றுகின்ற பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்தும் பேணுவது அத்தியாவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10