(எம்.மனோசித்ரா)

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் போலி நாணயத்தாள்களை செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டும், 1000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய குறித்த சந்தேகநபர்  மேலதிக விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.