இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

வடக்கு கிழக்கில், மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். 

அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ்.பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார்  குவிக்கப்பட்டு , பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் , கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் மாவீரர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.