ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி தலைமையிலான  அதிகாரிகளும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்குமான சந்திப்பு இன்று  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது 

யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி தலைமையிலான  அதிகாரிகளும், மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை மகேசனுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்த  சந்திப்பில் உலக உணவுத்திட்டத்தினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 

குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு குறைபாடு, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டம் மற்றும் ஜீவனோபாயத்திட்டங்கள் என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும்  கருத்து தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.