மலையகத்தின் மக்கள் எழுத்தாளர் கலாபூசணம் மல்லிகை சி.குமார் எழுதிய நூல் 23ஆவது கொடகே தேசிய சாகித்திய விருதை பெறவுள்ளது.
2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த சிறுகதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக மல்லிகை சி.குமாரின் “ வேடத்தனம் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
மலையக மண்வாசனை சொட்ட அம்மக்களின் வாழ்வியலை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாக பறைசாற்றி நின்ற கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் தனது சிறுகதைகள் கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது மட்டுமின்றி பிழைப்புவாத அரசியலை எள்ளி நகையாடி சமூக விடுதலையை வலியுறுத்தி வந்துள்ளார்.
அந்தவகையில் அவரது மாடும் வீடும் , மனுஷியம் ஆகிய மக்களுக்கான இலக்கிய படைப்புகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவரது வேடத்தனம் நூல் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தநிலையில் ஜனவரி மாதம் 27ஆம் திகதி எதிர்பாராத நிலையில் இயற்கை எய்தினர்.
இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வின் போது இந்த வேடத்தனம் சிறுகதை நூல் வெளியீடு செய்யப்பட்டது. இலக்கியவாதிகளான மு.சிவலிங்கம் மேமன் கவி, பொன்னுதுரை உள்ளிட்டவர்கள் அந்த நெகிழ்ச்சியரமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வருடம் சிறந்த சிறகதை தொகுப்புக்கான கொடேகே சாகித்திய விருதை மல்லிகை சிகுமாரின் வேடத்தனம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM