ஆறுமுகநாவலரின் 142 ஆவது குருபூஜை நிகழ்வை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்க அரசாங்கம் ஏற்பாடு!

By Vishnu

25 Nov, 2021 | 12:24 PM
image

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை நன்னாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடளாவிய ரீதியிலே அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

May be an illustration of 1 person

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூஜையும் சேர்ந்த நிகழ்வாக, 27 ஆம் திகதி நவம்பர் 2021 சனிக்கிழமை, காலை 9.30 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், அகில இலங்கை இந்துமாமன்றம், இந்து வித்தியா விருத்திச் சங்கம், இலங்கை சைவ நெறிக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் - இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, கொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் 27.11.2021 சனிக்கிழமை, காலை 8.00 மணிக்கு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் 27.11.2021 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விசேடமாக முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வுகளோடு வடக்கு , கிழக்கு மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும்  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்