சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

54 வயதான ஆண்டர்சன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் மாத்திரம் நாட்டின் பிரதமராக இருந்தார். 

ஆண்டர்சன் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

அத்துடன் தனிக்கட்சி அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் பிரதமராக முயற்சிப்பேன் என்றும் அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்ததாக ஆண்டர்சன் சுட்டிக்காட்டினார்.

சுவீடனின் முதல் பெண் பிரதம மந்திரியாக மக்டலேனா ஆண்டர்சன் புதன்கிழமை பதவியேற்றார். 

மக்டலினா ஆண்டர்சனுக்கு முன்னதாக 33 பேர் சுவீடனின் பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.

மக்டலினா ஆண்டர்சனில் கொண்டுவரப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேறத் தவறியதனாலும், அவரது கூட்டணிக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகியதனாலும் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்..

மக்டலினா ஆண்டர்சனின் வரவுசெலவுத் திட்டத்திற்கு பதிலாக எதிர்க்கட்சிகளால் வரையப்பட்ட வரவு-செலவுத் திட்டத்திற்கு பாராளுமன்றம் வாக்களித்தது.