புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இங்கிலாந்த‍ை நோக்கி பயணித்த படகொன்று பலத்த காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Image

இந்த சம்பவம் புதன்கிழமை பிரான்ஸ் நகர் கலேஸுக்கு அருகே ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்றுள்ளது.

பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் பிரிக்கும் கடலில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைக் காலத்தில் பதிவான மோசமான சம்பவமாக இரு கருதப்படுகிறது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். 

உயிர் பிழைத்த இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாகவும், மற்றொரு நபர் இன்னும் காணவில்லை என்றும் அவர் சுட்டக்காட்டினார்.

Migrants are brought ashore by RNLI Lifeboat staff, after having crossed the channel, in Dungeness, Britain, November 24, 2021. REUTERS/Henry Nicholls