20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் நேற்யை தினம் விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே கெஹலிய இதனைக் கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசி இப்போது 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு கிடைக்கிறது.
பூஸ்டர் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்காக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், உலகின் சில நாடுகளில் மாத்திரமே 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளன.
நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே 380,213 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
தற்போது மொத்த சனத்தொகையில் 73% பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் 75% இலக்கை எட்டுவதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
இது முழு நாட்டு மக்களுக்கும் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை ஏறக்குறைய 1.1 மில்லியன் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இலக்கை மேலும் 200,000 ஆக அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM