(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை. நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றோம்.
எமது பக்கமுள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் நாம் செய்த அதே தவறையும் நீங்கள் செய்வதற்கா ஆட்சிக்கு வந்தீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ முன்னிலையில் தமிழ் தேசியயக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள் ,அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ,தேர்தல் திருத்தம் வரும்வரை அல்லது அரசியலமைப்பில் ஒரு திருத்தம் வரும்வரை மாகாணசபைகளுக்கான தேர்தல் எதுவும் நடத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மாகாணசபை தேர்தலை கடந்த அரசாங்கம் நடத்தவில்லை. அந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த நாமும் அதனை வலியுறுத்தவில்லை என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றேன்.
அது எங்கள் பக்கம் உள்ள தவறு என்பதனையும் உங்கள் முன்பாக ஏற்றுக்கொள்கின்றேன் .அந்த அரசாங்கம் விட்ட தவறை நீங்களும் விடப்போகின்றீர்களா? கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரு வருடங்கள் முடிந்து விட்டன. பிரதமரின் காலம் ஒரு வருடம் முடிந்து விட்டது. நாங்கள் விட்ட தவறை நீங்களும் செய்வதென்றால் எங்களைப் போன்று தானே நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த மாகாணசபை தேர்தல்களை நடத்தலாமே, அதற்கு ஏன் பின்வாங்குகின்றீர்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM