விஷாலின் 'வீரமே வாகை சூடும்' பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Gayathri

24 Nov, 2021 | 08:35 PM
image

விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் து. ப. சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. 

இதில் 'புரட்சி தளபதி' விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'தேவி 2 ' பட புகழ் நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். 

இவர்களுடன் யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி, ரவீனா, மரியம் ஜோர்ஜ், 'பிளாக் ஷீப்' தீப்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

''அதிகார பலம் படைத்தவர்களை சாமானியன் ஒருவன் எதிர்கொள்ளும் கதைதான் வீரமே வாகை சூடும். அனைத்து தரப்பினரும் இரசிக்கும் வகையில் கொமர்சல் அம்சங்களுடன் ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் சென்னையில் திட்டமிட்டபடி நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது '' என்றார்.

விஷாலின் சொந்த பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாராகியிருக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால் விஷால் இரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

விஷால் நடிப்பில் வெளியான 'எனிமி' எதிர்பார்த்த அளவிற்கு பாரிய அளவில் வசூல் வெற்றியை பெறாததால், அவரது நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். 

இதன் காரணமாக இப்படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் விடயங்களில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right