குஜராத் - க்ரீக் பகுதியில் பெரும் பயிற்சியில் இந்திய இராணுவம்

Published By: Gayathri

24 Nov, 2021 | 08:34 PM
image

துகஷின் சக்தி என்ற குறியீட்டுப் பெயரில் நான்கு நாள் பயிற்சி நடவடிக்கையில் இந்திய இராணுவம் ஈடுப்பட்டுள்ளது.  குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் இந்த பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் புனேவை தளமாகக் கொண்ட தெற்குக் கட்டளையகத்தில் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த பயிற்சி நடவடிக்கையில் இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக் காவற்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, குஜராத் மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெற்றது.

சேர் க்ரீக் என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ரான் ஆஃப் குட்ச் பகுதியில் சர்ச்சைக்குரிய 96 கிமீ கடல் பகுதி ஆகும். இது குஜராத்தின் குட்ச் பகுதியையும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் பிரிக்கிறது.

இந்தப் பயிற்சியானது துருப்புகளைச் நிலை நிறுத்தல், முப்படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் போர் உபாயங்களை வகுத்தல் போன்ற நடவடிக்கைளை  உள்ளடக்கியதாகும். 

இந்த பயிற்சியில் இந்தியாவின் கடல் கமாண்டோக்களின் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02
news-image

ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல்...

2023-12-05 15:38:48
news-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு...

2023-12-05 14:46:47
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிஎன்என் செய்தியாளரின்...

2023-12-05 12:59:21
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய கடுமையான...

2023-12-05 11:09:24
news-image

சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அள்ளிச்சென்ற வெள்ளம்

2023-12-04 17:31:57
news-image

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றது - இன்று...

2023-12-04 17:07:16
news-image

இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய மெராபி எரிமலை...

2023-12-04 14:38:45
news-image

சென்னை | கனமழை -வேளச்சேரி அருகே...

2023-12-04 12:38:26
news-image

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் அமெரிக்க கப்பல்கள்...

2023-12-04 11:31:46