(ஏ.என்.ஐ)

கொவேக்ஸ் நாடுகளுக்கு விரைவில் கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க சேரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

பிற நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க, இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு விநியோகம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அதேபோன்று நேபாளத்திற்கு தேவையான கொவிட் சீல் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க சேரம் நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்தது.  ஆனால் ஏனைய நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகள் தயாரிப்பாளராக இருப்பதால், இப்போது ஒவ்வொரு மாதமும் 120 மில்லியன் டோஸ் கொவிட்சீல் தடுப்பூசிகளை சேரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.