XAMPLE - இலங்கையின் இணையக் கல்வி நடவடிக்கைகளில் புரட்சிகர மாற்றம்

By T Yuwaraj

24 Nov, 2021 | 08:24 PM
image

Xample - மெய்நிகர் மூலம் கல்வி கற்கும் தளம் ஒன்றை, Novelwall Sri Lanka நிறுவனம் அண்மையில் உருவாக்கியுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை எதிர்நோக்கி, சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் மாணவ, மாணவியருக்கு இது சிறந்த மற்றும் சக்திமிக்க துணையாக அமையவிருக்கிறது. 

அடுத்த தலைமுறையின் சிறந்த எதிர்காலத்திற்கு, கல்வியின் முக்கியத்துவம் பிரதானமானது என்பதை நன்கு உணர்ந்த Novelwall Sri Lanka நிறுவனம், Xample தளத்தின் ஊடாக ஒட்டுமொத்த தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மாணவ, மாணவியரின் தேவைகளை உணர்ந்துரூபவ் ஒரு முழுமையான தீர்வாக இந்த வழிகாட்டல் வழிமுறையை உருவாக்கியுள்ளதாக இதன் ஆரம்பகர்த்தா துன்கு ஒஸ்மன்ட் தெரிவித்துள்ளார்.

சவால்களுக்கு சாதகமான மனோ நிலையை உருவாக்கும் அதேவேளை, தொடர்ச்சியாக முயற்சி செய்து, இலக்குகளை அடைந்துகொள்ள மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் Xample என்ற இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கல்வி கற்கும் தளம் ஊடாக,‘பரீட்சை மற்றும் மீள் பரிசோதனைக் கருவி’ ‘‘Testing & Revision Tool’ ஊடாக கற்றல் நடவடிக்கை மிகவும் சிறந்த நிலையை அடைகிறது. 

மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு, கல்வி கற்கும் இந்தச் செயற்பாட்டினை, பரீட்சையின் வெற்றி வரை மிகவும் ஆர்வத்துடன் முன்னெடுப்பதற்கு தேவையான பல்வேறு உள்ளடக்கங்களை இது கொண்டுள்ளது. 

மேலும், Xample, மாணவர்களுக்கு தம்மைத் தாமே சவாலுக்கு உட்படுத்தி, பரிசோதித்துக் கொள்ளும் தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அதன் மூலம், அவர்களுக்கு தன்னம்பிக்கையையும்ரூபவ் தொடர் முயற்சியையும் ஊக்குவித்து, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வேலைப்பளுவையும் குறைக்கிறது.

தற்போது நிலவி வரும் COVID-19 தொற்று நோயின் காரணமாக, நாட்டின் கல்வி முறைமையில் பெரும் பின்னடைவு காணப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், ஒன்லைன் மூலம் கல்வி கற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால், அவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பெரிதும் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாணவர்கள் ஒன்லைன் மூலம் கல்வி கற்கும் போது, அவர்களின் செயற்பாடுகளை பார்வையிட முடியாத காரணத்தினால் மேலும் பல சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

 தமது பிரச்சினைகளை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ள, மாணவர்களுக்கு நேரம் கிடைக்காத அதேவேளையில், ஆசிரியர்கள் தங்களின் வகுப்பறைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போவதனால், மாணவ, மாணவியரை ஊக்குவித்து அவர்களுக்கு ஆக்கபூர்வமான கல்வி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.  இந்த விடயம் தொடர்பாக பெற்றோர் நன்கு உணர்ந்துள்ளனர். 

விசேடமாக, க.பொத. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவ, மாணவியருக்கு இந்தத் தேவைப்பாடு நன்கு காணப்படுவதை பெற்றோர் அஅறிந்துள்ளனர். இதற்கு ஒரு முக்கிய காரணமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரீட்சைகள் மற்றும் கல்வி கற்றல் நடவடிக்கைகள் தொடர்பான மனோநிலை வித்தியாசப்படுவது ஒரு முக்கிய காரணமாகும்.

இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டே,  துன்கு ஒஸ்மன்ட் அவர்களின் எண்ணக்கருவில் உருவான Xample உருவாக்கப்பட்டுள்ளது. எனவே,  இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் Xample தீர்வு காணும் அதேவேளை, ஒன்லைன் கல்வி கற்கும் செயற்பாட்டை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான பல்வேறு உள்ளடக்கங்களும் காணப்படுகின்றன. 

தம்மைத் தாமே பரிசோதித்துக் கொள்ளும் மற்றும் கல்வி கற்கும் ஒரு தளம்ரூபவ் Xample இல் இருப்பதனாலும்,  கல்வி கற்கும் செயற்பாட்டை ஒரே வகையாக சீர்படுத்துவதனாலும், பரீட்சைகள், மீள் பரிசோதனை ஆகியவற்றுக்கு ஒரே தீர்வாக இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண மற்றும் உயர்தர மாணவ, மாணவியர், தங்களின் பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேறுகளை அடைந்து கொள்ள மகிழ்ச்சியுடன் இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வித குறைபாடுகளும் இன்றி, அவர்கள் தமது இலக்குகளைச் சென்றடையக் கூடியதாக உள்ளது.

நான்கு கட்டச் செயற்பாடாகக் காணப்படும் இந்த Xample இன் கற்கை முறைகள் (தயார்படுத்தல், சமர்ப்பித்தல், பயிற்சி செய்தல் மற்றும் பெறுபேறுகளை அடைந்து கொள்ளுதல்)இந்த முறைமைகளையும் தாண்டிச் சென்று, மாணவ, மாணவியருக்கு தமது அறிவைப் பரிசோதித்துக் கொள்ளவும், எந்தவொரு பாடத்திலும் தமது பரிசோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். 

அத்துடன், பழைய வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பயன்படுத்தவும், தமது பிழைகளை ஒன்லைன் மூலம் அடையாளம் கண்டு, அவற்றை விளங்கிக்கொண்டு, அவற்றுக்கான விளக்கங்களைக் கற்று சகல வினாக்களுக்கும் முழுமையாக தம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியும்.

இதன் மூலம், 25 வருடங்களுக்கும் மேற்பட்ட கால வினாத்தாள்களுக்கு வழிவகுக்கப்படுகிறது. அத்துடன், இலங்கையின் மிகச் சிறந்த மாதிரி வினாத் தாள்களும் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. எனவே, மிகச் சிறப்பான மற்றும் உள்ளடக்கப்பட்ட கல்வித் திட்;டம் மற்றும் பரிசோதனை முறையொன்றை ஒவ்வொரு பாடத்திலும், அந்தப் பாடத்தில் சிறந்த புள்ளிகளைப் பெறுவதற்காக மாணவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

ஒரு மாணவரோ அல்லது மாணவியோ குறித்த ஒரு பாடத்தில் கூடியளவு பிழைகளைக் காண்பிப்பாராயின், அந்தப் பாடத்தில் அதிகளவு பரிசோதனைகளையும், வினாக்களையும் அதிகரித்து, குறித்த பாடத்தில் தேர்ச்சியடையும் வரை மாணவருக்குத் தேவையான அனைத்து மீள் பரிசோதனைகளையும்ரூபவ் மீள் கற்பித்தல்களையும் இத்தளம் மேற்கொள்கின்றது. இந்தச் செயற்பாட்டின் விளக்கம் கீழே தரப்படுகிறது.

‘பயிற்சி ஒரு மனிதருக்கு தொடர்ந்து முன்னேற்றத்தைப் பெற்றுக்கொடுக்கும்’ என்ற தொனிப் பொருளில், இந்த ஒன்லைன் கற்கைத் தளமானது, மாணவர்களைத் தமது பரீட்சைகளுக்குத் தொடர்ச்சியாக முகம் கொடுத்து வரும் நிலையை உருவாக்குகின்றது. ஒவ்வொரு முறையும் பரீட்சைக்கு முகம் கொடுத்த பின்ரூபவ் பரீட்சையின் முழுமையான விபரங்களும் மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்த முழுமையான ஆய்வுத் தகவல்கள் மூலம், மாணவர் குறித்த பாடத்தில் எந்தளவு தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதையும்ரூபவ் தம்மை மேலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும், பரீட்சையின் போது அதற்கு முகம் கொடுத்த முறைகள் தொடர்பாகவும் முழுமையான விபரங்கள் இங்கு பெற்றுக் கொடுக்கப்படுவதனால், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பெரும் துணையாக அமைகிறது. 

Xample ஐ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக்கூடிய நிலை காணப்படுவதனால், பெற்றோருக்கு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது, அவர்களின் செயற்பாடுகளைக் கவனிக்கவும், அவதானிக்கவும் முடிகிறது. மேலும், ஏனைய விளம்பரங்களோ அல்லது கானொளிகளுக்கான லிங்குகளோ இல்லாத காரணத்தினால், மாணவர்களின் கவனம் சிதையாது இதில் கிரமமாகக் கல்வி கற்க முடிகிறது.

இந்த Xample தொழில்நுட்பத்தின் ஆரம்பகர்த்தாவான துன்கு ஒஸ்மன்ட்,  இலங்கையின் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார். ‘எவ்வித சந்தேகமும் இன்றி, எமது இளம் சந்ததியினர்,  உலக தரம் வாய்ந்த கல்விக்கு வாய்ப்பளிக்கும் போது, அவ்வாறு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உலகின் எந்தவொரு மாணவ சமுதாயத்தையும் விட அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 

உலகின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், உலகளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில், எமது மாணவர்கள் பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர். எவ்வாறாயினும், எமது நாடும் இந்த மாற்றங்களுக்குத் தயாராகவும், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கல்வி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், அதன்மூலம் கல்வியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் தயார் நிலையிலுள்ளது என்பது ஒரு உறுதியான விடயமாகும் என்று நான் நம்புகிறேன்’.

ஐக்கிய இராச்சியத்தின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளை எமது மரபணுக்குள் பெற்றுள்ள நாம், இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுடன் டிஜிட்டல் செயற்பாடுகளில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளோம். 

எமது சகல அனுபவங்களையும் பயன்படுத்தி, இந்த ஒன்லைன் கல்வி கற்றல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. கற்றலுக்கான பல்வேறு முறைகளையும் பெற்றுக்கொடுத்து, செயற்பாடுகளை அதிகரித்து, மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் அதிகூடிய திறமைகளை அடைந்துகொள்ள உதவும் வகையில், நாம் இவற்றை நிர்மாணித்துள்ளோம். இவ்வாறான ஒரு தளத்தை உருவாக்குவது ஒரு இலகுவான விடயமல்ல. 

இலங்கையின் கல்வியை உயர் மட்டத்திற்கு இட்டுச் சென்று, சர்வதேச மட்டத்தில் அதனை நிறுவுவதற்கு ஆர்வமுள்ள மற்றும் கனவு காணும் அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்’ என்று ஒஸ்மன்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. Novelwall Xample ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், கல்வித் தரங்கள் அதிகூடிய மட்டத்தை அடைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாணவர்களே எமது எதிர்காலமாவார்கள். அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரத் தேவையான போதியளவு வளங்களைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், அவர்கள் மென்மேலும் சக்தி மிக்கவர்களாக வளர்ந்து, எல்லைகளைத் தாண்டிச் சென்று, சாதாரண கல்வியைத் தாண்டிய அதியுயர் பெறுபேறுகளை அடைந்து கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

நிறுவனம் பற்றி.. 

ஐக்கிய இராச்சியத்தின் மாணவர்களினதும், பல்கலைக்கழகங்களினதும் அதிக நம்பிக்கையை வென்ற கல்வித் துறையில் முன்னணி சந்தைப்படுத்தல் நிறுவனமாகக் காணப்படுகின்றது. மிகச் சிறந்த தொழில் வல்லுநர்களைக் கொண்டு இது செயற்படுகிறது. 

சந்தைப்படுத்தல் செயற்பாட்டுக் குழுவாகக் காணப்படும் இந்த நிறுவனத்தில், சுமார் 100 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம், கல்வி, விற்பனை போன்ற பன்முகத் துறைகள் காணப்படுகின்றன. கல்வி கற்க சகலருக்கும் உரிமையுள்ளது என்ற தொனிப்பொருளுடனேயே Novelwall இன் செயற்பாடுகள் யாவும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஐக்கிய இராச்சியத்தில் எமது நடவடிக்கைகள் நன்கு வரவேற்கப்பட்டுள்ள நிலையில்,  இலங்கையின் கல்வித் தரங்களையும் மேம்படுத்துவதில் நாம் செயற்பட்டு வருகிறோம். இலங்கையின் கல்வியை உலக மட்டத்திற்கு இட்டுச் செல்ல எம்மால் உதவ முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். Xample என்பது, Novelwall நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவான துன்கு ஒஸ்மன்ட் அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஒன்றாகும். அவர் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில் முயற்சியாளராகவும், இலங்கையிலிருந்து ஐக்கிய  இராச்சியத்திற்குக் குடிபெயர்ந்த ஒரு நபராகவும் தனது தாய்நாட்டின் கல்வித் தரங்களை மேம்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படும் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

60 ஆவது ஆண்டில் Vogue Jewellers

2022-12-01 17:41:55
news-image

MARLBO வருட இறுதி மலிவு விற்பனை

2022-11-28 17:14:01
news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26
news-image

சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டின் 3 ஆவது...

2022-11-11 09:40:26
news-image

தெளிவான தடையற்ற காட்சி அனுபவத்தை 32...

2022-11-10 12:52:56