நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது ஓரளவு வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலிய மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் .
இதன்படி புதன்கிழமை விலைப் பட்டியலின் படி,
ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாவிலிருந்து 540 ரூபாவாகவும், கறி மிளகாய் 600 ரூபாவிலிருந்து 500 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 380 ரூபாய்க்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாவிலிருந்து 360 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒருகிலோ 360 ரூபாவிலிருந்து 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாவிலிருந்து 300 ரூபாய்க்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 340 ரூபாவிலிருந்து 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மரக்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் .
இதன்போது கருத்து தெரிவித்த கடை உரிமையாளர்கள்,
“எங்களது கஷ்டத்தின் மத்தியில் சில மரக்கறி வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றோம்.
அதிலும் கொள்வனவு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. மீதமான மரக்கறி வகைகளை குப்பைகளில் வீச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்”.
மேலும் “குறைந்த விலைக்கு மரக்கறி வகைகளை விற்பனை செய்து வரும் பணத்தில் மின்சார பட்டியல் கட்டணத்தை கட்டுவதா? அல்லது வீட்டுச் சுமையை சரி செய்வதா? கடைக்கூலி கட்டுவதா? தொழிலிக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா?” என கேள்வி கேள்வியெழுப்பினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM