கண்டி அனுரகம பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை தமக்கு வழங்குமாறு கோரி,  கண்டி பதுளை பிரதான வீதியின் அனுரகம பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

அனுரகம பகுதியில் பொதுவாகவே நீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது. தற்போது கடும் வெப்பநிலை நிலவுவதால் குடிநீர் இல்லாமல் போயுள்ளது.

எனவே உடனடியாக தமக்கு சுத்தமான குடிநீரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.