கிண்ணியா படகுபாதை விபத்து : மூவர் கைது : தொடரும் விசாரணைகள் !

24 Nov, 2021 | 04:42 PM
image

(எம்.மனோசித்ரா)

திருகோணமலை மாவட்டம் - கிண்ணியா பொலிஸ் பிரிவு குறிஞ்சாங்கேணி களப்பில் நேற்று செவ்வாய்கிழமை படகுபாதை கவிழ்ந்து சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 3 மற்றும் 8 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் நால்வர் , 32 வயதுடைய பெண் மற்றும் 70 வயதுடைய முதியவர் ஒருவர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். 

இவர்கள் அனைவரும் குறிஞ்சாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்தோடு காயமடைந்த 18 பேர் கிண்ணியா , கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையிலேயே குறித்த படகுபாலத்தின் உரிமையாளர், படகுபாலத்தை செலுத்துபவர் ஆகியோர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த படகுபாதையில் பயண கட்டணம் அறவிடும் நபரும் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35, 40 மற்றும் 53 வயதுகளையுடைய கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். குறித்த சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதோடு , கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறிஞ்சாங்கேணி களப்பில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகுப்பாதை கவிழ்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது இரு குழந்தைகளும் , பிரிதொரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளும் , முதியவர் ஒருவரும் உயிரிழந்தனர். 

சம்பவத்தையடுத்து பிரதேச மக்களால் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.தௌபீக்கினுடைய வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அங்கு அமைதியற்ற நிலையும் ஏற்பட்டது.

இரு சந்தர்ப்பங்களில் குறித்த பகுதியில் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் பாலம் அமைக்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். 

இவ்வாறான நிலையில் விபத்திற்குள்ளான படகுபாதை பயணிப்பதற்கு கிண்ணியா நகரசபையே அனுமதி வழங்கியது என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் , அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதனை மறுக்கும் வகையில் பிரதேசசபை மற்றும் நகரசபையின் அனுமதியின்றியே குறித்த படகுபாதை பயணித்தாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02