logo

குறிஞ்சாங்கேணியில் அனுமதியும் இன்றியே படகு சேவை : சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அரசாங்கம்

24 Nov, 2021 | 04:20 PM
image

(எம்.மனோசித்ரா)

திருகோணமலை - கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியில் படகு விபத்து இடம்பெற்ற களப்பில் பயணிப்பதற்கு கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்த போதிலும், அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பிரத்தியேக செலவில் மூன்றரை கிலோ மீற்றருக்கு மாற்று பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியும் இன்றியே இந்த படகு பயணித்துள்ளது. 

எனவே இதில் சட்ட ரீதீயான பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அதற்கமைய சட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் கிண்ணியா சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவலையை வெளியிட்டதோடு , அது குறித்த பின்னணியையும் கேட்டறிந்து கொண்டார். 

நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினார்.

இந்த பகுதியில் இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவினால் அடிக்கல் நாட்டப்பட்டதையடுத்து , நிர்மாணப்பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எவ்வாறிருப்பினும் மூன்றரை கிலோ மீற்றரில் இதற்கான தற்காலிக மாற்று பாதையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபையின் குறித்த படகு பாதைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. 

எனினும் அனுமதி மறுக்கப்பட்டு, அதற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பிரத்தியேக செலவில் மாற்று பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியும் இன்றியே குறித்த படகு இயங்கியுள்ளது.

எனவே இதில் சட்ட ரீதியான பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அதற்கமைய சட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பர். 

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படும். இழப்பீடு வழங்குவதால் உயிரின் பெறுமதியை மதிப்பிட முடியாது என்ற போதிலும் , அதனை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். 

எவ்வாறிப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மால் வழங்கப்படக் கூடிய உயர்ந்தபட்ச நியாயம் இந்த பாலத்தை துரிதமாக நிர்மாணித்துக் கொடுப்பதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய...

2023-06-09 20:43:39
news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51