(எம்.மனோசித்ரா)
இலங்கை அரசாங்கத்திற்கும், வியட்நாம் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல் தொடரின் பிரதிபலனாக இரு நாடுகளுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்புக்கள் மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, வர்த்தகக் கொடுக்கல் வாங்கலில் செலவுகளைக் குறைத்தல், தேச எல்லைகள் தொடர்பான வரிகளை சரியான வகையில் கணிப்பீடு செய்தல் மற்றும் திரட்டுதல், மட்டுப்பாடுகளுக்குட்பட்ட பொருட்களை பரிமாற்றுதலை தடை செய்தல், மட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளை விதித்தல் போன்றவற்றுக்காக குறித்த முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக உடன்படிக்கை பங்களிப்புச் செய்யும்.
அதற்கமைய, இருதரப்பினரால் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM