குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுதாபம்

Published By: Digital Desk 3

24 Nov, 2021 | 08:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாடசாலை மாணவர்கள்  நான்கு பேர் உட்பட  ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தமது அனுதாபத்தை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப , மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை குறிஞ்சாக்கேணி  ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட  ஆறு பேர் மரணித்த சம்பவம் இந்த நாட்டில் மிகப்பெரிய கவலையையும், அவலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் உட்பட இருபதற்கும் மேற்பட்டோரை படகு பாதையில் ஏற்றிக்கொண்டு பயணித்த வேளையில் இந்த அனர்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆற்றிலே நடந்த அனர்த்தத்தில் ஷஹு சகி (3 1/2வயது)ஷகிலா (6 வயது)ஹரிஸ் பஹி (6 வயது) ஸரீன் (8 வயது)ஆகிய பாடசாலை சிறுவர்களும் ஷப்ரியா (30 வயது)என்ற தாயாரும் கேத்துல் ஸாஹர் என்ற முதியவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு பிள்ளைகளுமாக 3 பேர் இறந்திருக்கின்றார்கள்.

 அதே நேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பாடசாலை சகோதரர்களும் இறந்திருக்கின்றார்கள். இது மிகவும் மோசமான ,கவலை தரக்கூடிய சம்பவம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது. 

தமிழ் இஸ்லாமிய குழந்தைகள், சகோதரர்கள் இந்த விபத்தில் இறந்தமைக்கு  நாம் எமது ஆழ்ந்த கவலையை இந்த சபையின்  ஊடாக தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29