கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணம்புவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து கல்வெல பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள கட்டிடமொன்றுக்கு அருகிலிருந்தே சுமார்  34 வயது மதிக்கத்தக்க  நபரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் கம்பளை பொலிஸார், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற  பல  கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.