இரசாயன உரத்தினை தனியார் துறை இறக்குமதி செய்யலாம் : புதிய வர்த்தமானி வெளியாகும் என்கிறது அரசாங்கம்

24 Nov, 2021 | 01:00 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை. நாட்டில் தற்போது காணப்படுகின்ற உர தட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டு தனியார் துறையினருக்கு இரசாயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். 

அதற்கமைய இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

இது குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் , இரசாயன உர பாவனைக்காக அரசாங்கத்தினால் எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (24) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பசுமை விவசாயத்தினை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இரசாயன உர இறக்குமதியை தடை செய்து கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 

இந்த தீர்மானத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் , சேதன உரத்தினைப் பயன்படுத்தி 6 இலட்சத்து 50 000 ஹெக்டயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் இரசாயன உர இறக்குமதிக்காக தடை நீக்கி அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இன்று முதல் தனியார் துறையினருக்கு இரசாயன உரத்தை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும் அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையின் எவ்வித மாற்றமும் இல்லை என்பதால் அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது. 

இரசாயன உரத்தினை உபயோகிப்பவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்பட மாட்டாது.

உர தட்டுப்பாடு மாத்திரமின்றி அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பல பயிர்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

தமது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் உரிய நஷ்ட ஈடு வழங்கப்படும்.

உர தட்டுப்பாடு ஏற்பட்டமையின் காரணமாக பிரபாகரன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விடவும் எனக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. 

அரசாங்கத்திலுள்ளவர்கள் கூட இந்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் பசுமை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனுதவியைப்...

2022-12-08 16:10:34
news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07