(எஸ்.சதீஸ்)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று காலை முதல் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை வழி மறித்து பொகவந்தலாவ பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 09 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர்களுக்கான வேதனத்தினை நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பளமும் வாரத்திற்கு 03 நாள் வேலை தருவதாக  முதலாளிமார் சம்மேளம் அறிவித்ததையடுத்தே இந்த பாரிய அர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டு வருவதாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாடத்தில் போது தோட்ட தொழிலாளர்கள் வீதியை மறித்து வீதியல் படுத்த நிலையில் ஆர்பாடத்தில் ஈடுபட்டனர் .

இதனால் சில மனித்தியாளங்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கபட்டிருந்தது,

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ கிழ்பிரிவு,மேற்பிரிவு,டின்சன்,கொட்டியாகலை, கெம்பியன் ஆகிய தோட்டமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.