பொது மக்கள் முறையாக கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கையில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் மொத்தம் 23,193 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பொலிஸாரின் இந்த சிறப்பு நடவடிக்கை மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பணியில் 1,475 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்கெடுத்தனர்.
இதன்போது 6,324 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முகக் கவசங்களை அணியாத 4,351 பேருக்கு பொலிஸார் முகக் கவசங்களை வழங்கி வைத்தனர்.
மேலும் 7,105 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 918 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன் ஆரம்ப கட்டமாக மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.