(எம்.எம்.சில்வெஸ்டர்)

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சஹன் பிரதீப் வித்தான உலக மாஸ்டர்ஸ் பட்மின்டன்  சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இப்போட்டித் தொடரானது, இம்மாதம் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை ஸ்பெய்னின் செவில் நகரில் நடைபெறவுள்ளது.

இவர் 2019 இல் நடைபெற்ற கம்பஹா மாவட்ட பட்மின்டன் சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியனாகியிருந்ததுடன்,  40 வயதிற்கு மேற்பட்ட போட்டிப் பிரிவில் கம்பஹா மாவட்ட பட்மின்டன் சம்பியனுமாகியிருந்தார். 

2021 ஆம் ஆண்டில் நுவரெலியாவில் நடைபெற்ற அகில இலங்கை பட்மின்டன் தொடரில் சம்பியன் பட்டத்‍தையும் வென்றுள்ளார்.

இலங்‍கையை பிரதிநிதித்துவப்படுத்தி, உலக ‍பெட்மின்டன் போட்டியொன்றில் பங்கேற்கும் இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.