யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Articles Tagged Under: வாள்வெட்டு | Virakesari.lk

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட பகையே வாள்வெட்டுக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.