(எம்.எம்.சில்வெஸ்டர்)

அபுதாபியில் நடைபெற்று வரும் அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் பானுக்க ராஜபக்ச இருவரும் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும். 

No description available.

டெக்கன் கிளேடியேட்ர்ஸ் அணிக்காக விளையாடிவரும் வனிந்து ஹசரங்க, டீம் அபுதாபி அணிக்கெதிராக போட்டியில் 4 விக்கெட்டுக்களையும், டெல்லி புள்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

மேலும், டீம் அபுதாபி அணிக்கெதிரான போட்டியில் 18 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை அதிரடியாக விளாசி தனது  சகலதுறை ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார் வனிந்து ஹசரங்க.

இதேவேளை, பானுக்க ராஜபக்ச விளையாடிவரும் சென்னை பிரேவ்ஸ் அணியில் தசுன் ஷானக்க தலைவராக செயற்பட்டு வருகிறார்.  இதில் டெல்லி புள்ஸ் அணிக்கெதிரான போட்டி மற்றும் டீம் அபுதாபி ஆகிய அணிகளுக்கெதிராக அடுத்தடுத்து இரண்டு அரைச்சதங்களை விளாசினார் பானுக்க ராஜபக்ச.

இதில் டெல்லி புள்ஸ் அணிக்கெதிரான போட்டியில்  31 பந்துகளில் 6 பெளண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும், டீம் அபுதாபி அணிக்கெதிரான போட்டியில் 29 பந்துகளில் 3 பெளண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கலாக 54  ஓட்டங்களையும் அதிரடியாக  விளாசியிருந்தார் பானுக்க ராஜபக்ச. இதன் மூலம் தனது துடுப்பாட்டத்தை  மேலும் மெருகேற்றியுள்ளமை பாராட்டுதலுக்குரியதாகும்.