அக்கரப்பத்தனை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

23 Nov, 2021 | 04:23 PM
image

(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் நல்ல கொழுந்து எடுத்து கொடுக்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு குறைவாக கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும் இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை என தெரிவித்தும் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அதிகாரிகளும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் வருகை தந்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ,மு ன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ. பி. சக்திவேல் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

உடன் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறு தேயிலை மலைகளை துப்பரவு செய்யுமாறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் தோட்ட அதிகாரி இதற்கு ஏற்றுக்கொண்டதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் வேண்டும், எனவும் பேச்சுவார்த்தைகளை சும்மா நடத்தாமல் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டதுடன் தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் இதுவரை முறையாக கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டதுடன், குறிப்பிட்ட தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் தமக்கு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஏ.பி‌ சக்திவேல் கூறுகையில், தொழிலாளர்களுக்கு உடனடியாக சலுகைகளை வழங்க வேண்டுமெனவும் வழங்காத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தோட்ட துரைமார்கள்க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின் நிற்கப்போவதில்லை என இதன்போது தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31