2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரினை நேரில் பார்வையிடுவதற்கு வரையறுக்கப்பட்ட ரசிகர்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

அதன்படி கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் 2021 எல்.பி.எல். தொடரில் வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன் முதற்கட்ட போட்டிகள் கொழும்பு, ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது, நாக்-அவுட் சுற்றுகள் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறும்.

2021 லங்கா பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 23 அன்று நடைபெறும்.

இதேவேளை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரிலும் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமல் ராஜபக்ஷ அந்த பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.