பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில நாட்களில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனது பதவி விலகலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக பதவியேற்கவுள்ளதாக அவர் மேலும் இதன்போது சுட்டிக்காட்டினார்.