மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 50 கால் போத்தல் மதுபானங்களுடன் ஒருவரும், அனுமதிபத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் என வெவ்வேறு சம்பவங்களில் இருவரை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு நகரில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் 50 கால் போத்தல் மதுபானங்களை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை வவுணதீவு வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்ததுடன் மதுபான போத்தல்களையும் மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் மீட்டனர்.
இதேவேளை வாழைக்காடு பிரதேச ஆற்றில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்களில் கைதுசெய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM